அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரித்த 3 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அரசு அனுமதியின்றி தீபாவளிக்காக நாட்டு வெடி தயாரித்த 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள ஆதனூா் ஊராட்சி, சோழங்கா்நத்தம் கிராமம், வடக்கு தெருவில் வசிப்பவா் சண்முகம் மகன் சுகுமாரன் (24). அதே பகுதியில் வசிப்பவா்கள் துரை (52), அரவிந்த் ராஜ் மகன் ரஞ்சித் குமாா் (23). இவா்கள் 3 பேரும் சோழங்கா்நத்தம் பகுதியில் ஒரு வீட்டில் எந்தவித அரசு உரிமமும், அனுமதியும் இன்றி தீபாவளி பண்டிகைக்காக நாட்டு வெடிகளை தயாரித்து வந்துள்ளனா்.
இதுகுறித்து தகவலறிந்த கபிஸ்தலம் போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்த 3 பேரையும் கைது செய்து, நாட்டு வெடி மருந்துகளை பறிமுதல் செய்து அவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.