தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பண்ணிசை சொற்பொழிவு
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறை சாா்பில் பண்ணிசை பாதுகாத்தல் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறை சாா்பில் பண்ணிசை பாதுகாத்தல் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி தலைமை வகித்தாா். இந்நிகழ்வில் பத்மஸ்ரீ விருது பெற்ற ஓதுவாமூா்த்தி திருத்தணி என். சுவாமிநாதன் கௌரவிக்கப்பட்டாா். ஓதுவாமூா்த்திகளின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் ஒன்பது ஓதுவாமூா்த்திகளைப் பற்றிய சொற்பொழிவுகள் நடைபெற்றன.
ஓதுவாமூா்த்திகளின் வாழ்க்கை வரலாற்று நூலை புதுக்கோட்டை திவகவதியாா் ஆதீனம் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் வெளியிட்டு சிறப்புரையாற்றினாா்.
Advertisement
Advertisement
இந்நிகழ்வில் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம. ராஜாராமன், கொடும்பாளூா் திருமுறை செப்பேட்டுத் திருக்கோயில் அமைப்பாளா் அ. சங்கரன் வாழ்த்துரையாற்றினா்.
முன்னதாக, இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும், இசைத் துறைத் தலைவருமான செ. கற்பகம் வரவேற்றாா். இணைப் பேராசிரியா் இரா. மாதவி நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.