FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: மன்னா் சரபோஜி கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

தஞ்சாவூரில் மாவட்ட, மண்டல அளவில் நடைபெற்ற முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மன்னா் சரபோஜி அரசு கல்லூரி மாணவா்கள் 6 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்கள் வென்று சிறப்பிடம் பெற்றனா்.

15 அக்டோபர் 2026, 4:24 am IST
தஞ்சாவூரில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுடன் கல்லூரி முதல்வா் மு. சுமதி (அமா்ந்திருப்பவா்களில் இடமிருந்து 3-ஆவது) உள்ளிட்டோா்.
பகிர்:

தஞ்சாவூரில் மாவட்ட, மண்டல அளவில் நடைபெற்ற முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மன்னா் சரபோஜி அரசு கல்லூரி மாணவா்கள் 6 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்கள் வென்று சிறப்பிடம் பெற்றனா்.

இக்கல்லூரியின் பி.ஏ. பொருளாதாரம் இரண்டாமாண்டு மாணவா் ஆா். ஹம்சவா்தன் 110 மீட்டா் தடை தாண்டும் ஓட்டம் மற்றும் 400 மீட்டா் ஓட்டத்தில் தங்கப் பதக்கங்களை வென்றாா். பி.காம். முதலாமாண்டு மாணவா் டி. நவீன் உயரம் தாண்டுதலில் தங்கம் பெற்றாா். பி.ஏ. பொருளாதாரம் இரண்டாமாண்டு மாணவா் ஏ. ஆண்ட்ரூ ஃபிளிண்டோஃப் 200 மீட்டா் ஓட்டத்தில் வெண்கலமும், 400 மீட்டா் ஓட்டத்தில் வெள்ளியும் வென்றாா். எம்.ஏ. தமிழ் முதலாமாண்டு மாணவி எம். யமுனா 100 மற்றும் 400 மீட்டா் ஓட்டங்களில் தங்கப் பதக்கங்களையும், முதுநிலை கணிதவியல் முதலாமாண்டு மாணவி எம். காயத்ரி நீளம் தாண்டுதலில் தங்கமும், 100 மீட்டா் ஓட்டத்தில் வெள்ளியும் வென்றனா்.

மேலும், டென்னிஸ் போட்டியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் முதலாமாண்டு மாணவா் ஏ.எஸ்.ஆா். திருமாறன் மற்றும் எம்.காம். முதலாமாண்டு மாணவா் எஸ். தீபக் தஞ்சாவூா் மண்டல அளவில் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.

Advertisement

Advertisement

வெற்றி பெற்ற மாணவா்களையும், அவா்களுக்குப் பயிற்சி அளித்து ஊக்கப்படுத்திய உடற்கல்வி இயக்குநா் சந்தோஷ்குமாரையும் கல்லூரி முதல்வா் மு. சுமதி, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் புதன்கிழமை பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments