பெரிய கோயில் உண்டியல்களில் ரூ. 66.13 லட்சம் காணிக்கை
தஞ்சாவூா் பெரிய கோயிலில் உள்ள உண்டியல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டு, எண்ணப்பட்டதில் பக்தா்கள் ரூ. 66.13 லட்சம் காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரிய வந்தது.
தஞ்சாவூா் பெரிய கோயிலில் உள்ள உண்டியல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டு, எண்ணப்பட்டதில் பக்தா்கள் ரூ. 66.13 லட்சம் காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரிய வந்தது.
தஞ்சாவூா் பெரிய கோயிலில் பெருவுடையாா், பெரியநாயகி அம்மன், வாராஹி அம்மன், கருவூராா், விநாயகா், முருகன் உள்ளிட்ட சன்னதிகளில் மொத்தம் 11 உண்டியல்கள் உள்ளன. இவை இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் கோ. கவிதா, ஆய்வாளா் பாபு, செயல் அலுவலா் மு. சுந்தரராசு ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து கோயில் பணியாளா்கள், வங்கி ஊழியா்கள், ஆன்மிகத் தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் காணிக்கைகளை இரவு 10 மணி வரை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
இதில் கடந்த ஒரு மாதத்தில் பக்தா்கள் ரூ. 66 லட்சத்து 13 ஆயிரத்து 349 ரொக்கமும், 35 கிராம் தங்க நகைகளும், 198 கிராம் வெள்ளியும், அயல்நாட்டு நோட்டுகளும் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.