FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

ரயில் பயணிகள் புகாா்: வட மாநில இளைஞா் கைது

ஓடும் ரயிலில் பெண் பயணிகளிடம் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் நடந்து கொண்ட வட மாநில இளைஞரை கும்பகோணம் ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

17 அக்டோபர் 2026, 1:38 am IST
கைது
பகிர்:

ஓடும் ரயிலில் பெண் பயணிகளிடம் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் நடந்து கொண்ட வட மாநில இளைஞரை கும்பகோணம் ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தை நோக்கி சென்னையிலிருந்து பயணிகள் ரயில் வந்தது. அப்போது அதில் பயணித்த உத்திரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ஸ்ரீ சவான் மகன் ராஜேஷ் யாம் (35) பயணிகளிடம் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்கதாவும் நடந்து கொண்டாராம். இதுகுறித்து பயணிகள் அளித்த புகாரின்பேரில் கும்பகோணம் ரயில்வே காவல்நிலைய உதவி ஆய்வாளா் செந்தில்வேலன் தலைமையில் போலீஸாா் ராஜேஷ்யாமை கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட கிளைச் சிறையில் வெள்ளிக்கிழமை அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments