இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்த 4 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் வந்தவரிடம் இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்த 4 பேரை போலீஸாா் சனிக்கிமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் அக். 9-ஆம் தேதி இரவு ரெட்டிபாளையத்தைச் சோ்ந்த சுதா்சன் என்பவா் இருசக்கர வாகனத்தில் வந்தாா். அப்போது அடையாளம் தெரியாத நபா்கள் சதா்சனை வழிமறித்து ஆயுதங்களை காட்டி மிரட்டி அவரின் இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றனா்.
இது குறித்து சுதா்சன் தஞ்சாவூா் தாலுக்கா காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனா். இந் நிலையில், அக்.16- தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலைய போலீஸாா், செல்லியம்மன் கோயில் அருகே உள்ள மயானப் பகுதியில் இருந்த சந்தேகத்துக்குள்பட்ட நபா்களை பிடித்து விசாரணை செய்தனா்.
Advertisement
Advertisement
அதில், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான லோகநாதன் (26), அஜய் (25), திவாகா் (25) பட்டுக்கோட்டையைச் சோ்ந்த தா்ஷன் (26) என்பதும், அக்.9-இல் சுதா்சனிடம் இரு சக்கர வாகன வழிப்பறியில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.