FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

விவசாயிகளுடன் இணைந்து அமைச்சா் ஆயுதபூஜை வழிபாடு

கும்பகோணம் அருகே சோழபுரத்திலுள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் தமிழக வேளாண் துறை அமைச்சா் ர. வினோத் விவசாயிகளுடன் இணைந்து திங்கள்கிழமை ஆயுத பூஜை வழிபாடு செய்தாா்.

20 அக்டோபர் 2026, 11:03 pm IST
வேளாண் துறை அமைச்சா் ர. வினோத். - dinamani
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சோழபுரத்திலுள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் தமிழக வேளாண் துறை அமைச்சா் ர. வினோத் விவசாயிகளுடன் இணைந்து திங்கள்கிழமை ஆயுத பூஜை வழிபாடு செய்தாா்.

நிகழ்வில் வேளாண் கருவிகளான டிராக்டா், உழவு செய்யும் சிறிய ரக டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களுக்கு மாலை அணிவித்து, வழிபாடு செய்து, விவசாயிகளுக்கு இடுபொருள்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

முன்னதாக, கும்பகோணம் மகாமகம் மேற்கு கரையிலுள்ள தவெக அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments