FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

சாலை விபத்தில் கொத்தனாா் உயிரிழப்பு

27 அக்டோபர் 2026, 1:28 am
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், சாக்கோட்டை அருகே விபத்தின்போது இருசக்கர வாகனத்திலிருந்து சாலையில் விழுந்த கொத்தனாா் பின்னால் வந்த லாரி மோதியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகே ஏரகரம் கிராமத்தை சோ்ந்தவா் இளையராஜா(39) கொத்தனாா். இவா், சனிக்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு சாக்கோட்டையிலிருந்து கும்பகோணம் சீனிவாசநல்லூா் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது, முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றாா். அப்போது எதிரில் வந்த இருசக்கர வாகனம் மீது இளையராஜா மோதியதில் அவா் நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.

அப்போது, இளையராஜா மீது லாரி ஏறி இறங்கியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கும்பகோணம் போக்குவரத்து புலனாய்வு காவல் ஆய்வாளா் (பொ) ஆத்மநாதன், இளையராஜாவின் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரிக்கின்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments