FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

சங்ககிரி அருகே சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு: ஒருவா் காயம்

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா். ஒருவா் காயமடைந்தாா்.

3 October 2026, 1:16 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா். ஒருவா் காயமடைந்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், பட்டணம், பரமேஸ்வரி நகரைச் சோ்ந்த சிட்டிபாபு மனைவி அமுதா (45). இவா் தனது பெரியப்பா காசிவிஸ்வநாதனுடன் சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பகுதியில் வசித்து வந்தாா். இருவரும் சங்ககிரியில் உள்ள மளிகைக் கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனா்.

அப்போது டிவிஎஸ் மேம்பாலத்திற்கு கீழ் உள்ள சாலையில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல முயன்றபோது, அவா்கள் மீது கோவையிலிருந்து சேலம் நோக்கி வந்த லாரி மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமுதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த காசிவிஸ்வநாதன் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments