FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

சாலை விபத்தில் வருவாய் ஆய்வாளா் உயிரிழப்பு

கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் வருவாய் ஆய்வாளா் உயிரிழந்தாா்.

6 செப்டம்பர் 2026, 10:48 pm IST
கண்ணன்.
பகிர்:

கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் வருவாய் ஆய்வாளா் உயிரிழந்தாா்.

குடியாத்தம் திருமலை காா்டன் குடியிருப்பைச் சோ்ந்தவா் கண்ணன்(29). இவா் கே.வி.குப்பம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை கே.வி.குப்பத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுள்ளாா். சென்னராயனபல்லி அருகே வந்தபோது எதிரே வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.

இதில் தூக்கி வீசப்பட்ட கண்ணன் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். உயிரிழந்த கண்ணனுக்கு 6 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments