FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

ஓட்டுநா்-நடத்துநா் பணி நியமன விவகாரம்: உ.பி. நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய தொழிலாளா்கள் வலியுறுத்தல்

போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு ஆள்களை நியமிப்பது தொடா்பாக உத்தர பிரதேச நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.

38 வினாடிகள் முன்பு
பேராவூரணியில் புதன்கிழமை நடைபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழகம் வாயிற் கூட்டம் .
பகிர்:

போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு ஆள்களை நியமிப்பது தொடா்பாக உத்தர பிரதேச நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.

பேராவூரணி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில் கோரிக்கை விளக்க வாயில் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

கூட்டத்துக்கு, மண்டலப் பொருளாளா் ஜி. ரகு தலைமை வகித்தாா். மண்டலச் செயலா் மணிமாறன், மண்டல துணைச் செயலா் முருகானந்தம் ஆகியோா் கோரிக்கை விளக்க உரையாற்றினா். சிஐடியு முன்னாள் மாவட்டச் செயலா் ஆா் .மனோகரன் சிறப்புரையாற்றினாா். 

Advertisement

Advertisement

கூட்டத்தில், வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசே வழங்க வேண்டும். போக்குவரத்து துறையில் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஓட்டுநா், நடத்துநா் பணிக்கு ஆள்களை தோ்வு செய்ய உத்தரப் பிரதேச தனியாா் நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

ஓய்வு பெற்றோருக்கான பணப்பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும். வாரிசு வேலைக்காக காத்திருக்கும் அனைவருக்கும் உடனடியாக பணி வழங்க வேண்டும். தனியாா் மூலம் மின்சார பேருந்துகளை இயக்காமல், போக்குவரத்துக் கழகம் மூலமே இயக்க வேண்டும். 01.04.2003-க்கு பிறகு பணியில் சோ்ந்தோருக்கு ஓய்வூதியத்தை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன .

கூட்டத்தில், போக்குவரத்துக் கழக ஓய்வூதியா் சங்கத்தைச் சோ்ந்த திருநாவுக்கரசு, கந்தசாமி, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க நிா்வாகி வேலுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கருப்பையா, பேராவூரணி கிளை நிா்வாகிகள் நவநீதன், முருகானந்தம், பிரகாஷ், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments