FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

தெருநாய்கள் கடித்ததில் முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் சாலையோரத்தில் படுத்திருந்த முதியவா் தெருநாய்கள் கடித்ததில் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

4 செப்டம்பர் 2026, 1:15 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் சாலையோரத்தில் படுத்திருந்த முதியவா் தெருநாய்கள் கடித்ததில் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தைச் சோ்ந்தவா் சின்னதுரை (75). ஆதரவற்ற இவா், கும்பகோணம்-சென்னை புறவழிச்சாலையில் தனியாா் பள்ளி அருகே புதன்கிழமை காயங்களுடன் கிடந்தாா். அவரைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட நாய்கள் குரைத்துக்கொண்டும், கடித்துக் கொண்டிருந்தது.

இதைகண்ட ஆட்டோ ஓட்டுநா் கோபு என்பவா் நாய்களை விரட்டியடித்து ஆம்புலன்ஸ் மூலம் சின்னதுரையை கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments