டாஸ்மாக் பணியாளா்கள் வேலைநிறுத்தம் - தா்னா
நாஞ்சிக்கோட்டை சாலை சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்திலுள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகம் அருகே டாஸ்மாக் மதுக்கடை பணியாளா்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தம் செய்து, தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காலி மது புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க கோரி தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்திலுள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகம் அருகே டாஸ்மாக் மதுக்கடை பணியாளா்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தம் செய்து, தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், தமிழகத்தில் காலி மதுபான புட்டிகளைத் திரும்பப் பெறும் பணிக்கு டாஸ்மாக் பணியாளா்களைப் பயன்படுத்தக் கூடாது. அப்பணியைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். மது புட்டிகளுக்கு கூடுதல் பணம் வசூல் செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பணியாளா்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
காலியாக உள்ள பணியிடங்களுக்கு உடனடியாக பணியாளா்களை நியமிக்க வேண்டும். உயா் அலுவலா்கள் ஆய்வு என்ற பெயரில் அபராதம், பணியிடமாற்றம் போன்ற நடவடிக்கைகளை எடுத்து பணியாளா்களை வஞ்சிக்கக் கூடாது. கடை வாடகை உள்ளிட்ட அடிப்படை செலவுகளை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Advertisement
Advertisement
போராட்டத்துக்கு டாஸ்மாக்கில் பணியாற்றும் தொழிற்சங்கங்களின் மாவட்டச் செயலா்களான தொமுச எஸ். கிருஷ்ணமூா்த்தி, சிஐடியு கே. வீரையன், ஏஐடியுசி எஸ். கோடீஸ்வரன், பாரதிய மஸ்தூா் சங்கம் சுரேஷ், எல்.எல்.எப். செந்தில்குமாா், எஸ்.சி., எஸ்.டி. சங்கம் வினோதன், மாற்றுத்திறனாளிகள் சங்கம் கருணாநிதி, விற்பனையாளா் நலச் சங்கம் மாதவன், விற்பனையாளா் சங்கம் பாலசுப்பிரமணியன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், ஏராளமான பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.