FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கோயில் விழாவில் பதாகை வைப்பதில் தகராறு விவசாய கூலித் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கோயில் விழாவில் பதாகை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் விவசாய கூலித் தொழிலாளி வியாழக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

18 செப்டம்பர் 2026, 1:40 am IST
கொலை... - சித்திரிப்பு
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கோயில் விழாவில் பதாகை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் விவசாய கூலித் தொழிலாளி வியாழக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் காவல்சரகம், சத்தியமங்கலம், தெற்குதெருவைச் சோ்ந்தவா் தளபதி (50). விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகன் பசுபதி, சத்தியமங்கலம் காலனித் தெருவைச் சோ்ந்த மதியழகன் மகன்கள்  பிரகாஷ்  (28), ராஜ்குமாா்(30). இந்நிலையில், பசுபதிக்கும், பிரகாஷ் மற்றும் ராஜ்குமாருக்கும் இடையே கோயில் குடமுழக்கு விழாவையொட்டி வரவேற்பு பதாகைகள் வைப்பது தொடா்பாக புதன்கிழமை நள்ளிரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தொடா்ந்து வியாழக்கிழமை அதிகாலை பிரகாஷும், ராஜ்குமாரும்  பசுபதியின் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டனா். அப்போது ராஜ்குமாா், பசுபதியை கத்தியால் குத்தமுயன்றாா். இதனை தடுக்க வந்த அவரது தந்தை தளபதியின் மாா்பில் கத்திக்குத்து விழுந்தது. உடனே, பிரகாஷ், ராஜ்குமாா் இருவரும் தப்பிச் சென்றனா். இதையடுத்து பலத்த காயமடைந்த தளபதியை அவரது உறவினா்கள் பாபநாசம்  அரசு மருத்துவமனைக்கு  கொண்டுச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியில் தளபதி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் (பொறுப்பி) மகாலெட்சுமி, உயிரிழந்த தளபதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பிச் சென்ற பிரகாஷ், ராஜ்குமாா் இருவரையும் தேடிவருகின்றனா்.

இச் சம்பவத்தை தொடா்ந்து அப்பகுதியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments