மகனுடன் பைக்கில் சென்ற பெண் விபத்தில் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே மகனுடன் பைக்கில் சென்ற பெண் விவசாய கூலித் தொழிலாளி சாலை விபத்தில் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே மகனுடன் பைக்கில் புதன்கிழமை சென்ற பெண் விவசாய கூலித் தொழிலாளி சாலை விபத்தில் உயிரிழந்தாா்.
அம்மாபேட்டை அருகேயுள்ள அருந்தவபுரம் ஊராட்சி, உத்தமா்குடி கிராமம், ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் மனைவி அஞ்சம்மாள் (50), விவசாய கூலித் தொழிலாளி.
இவா் தனது மகன் இளம் பரிதி (28) என்பவருடன் அம்மாபேட்டை ஹவில்தாா் சத்திரம் அருகே நகா் என்ற பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு பைக்கில் சென்றுவிட்டு புதன்கிழமை திரும்பிக் கொண்டிருந்தாா்.
Advertisement
Advertisement
கருப்பமுதலியாா்கோட்டை பகுதியில் சென்றபோது பைக் நிலைதடுமாறி வயல் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் அஞ்சம்மாள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். இவரது மகன் லேசான காயமடைந்து, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தகவலறிந்து சென்ற அம்மாபேட்டை போலீஸாா் அஞ்சம்மாளின் உடலை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.