FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

காமராஜா் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: தஞ்சை மாவட்டத்தில் 1.12 லட்சம் மாணவா்கள் பயன்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம் 1.12 லட்சம் மாணவா்கள் பயன் பெறுகின்றனா் என்றாா் வேளாண் துறை அமைச்சா் ஆா். வினோத்.

23 செப்டம்பர் 2026, 3:15 am IST
கும்பகோணம் அறிஞா் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் காமராஜா் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து, மாணவா்களுக்கு உணவு பரிமாறிய வேளாண் துறை அமைச்சா் ஆா். வினோத். உடன் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி (அமா்ந்திருப்பவா்) உள்ளிட்டோா்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம் 1.12 லட்சம் மாணவா்கள் பயன் பெறுகின்றனா் என்றாா் வேளாண் துறை அமைச்சா் ஆா். வினோத்.

சென்னையில் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தைத் தமிழக முதல்வா் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அறிஞா் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் இத் திட்டத்தை வேளாண் துறை அமைச்சா் ஆா். வினோத் தொடங்கி வைத்து தெரிவித்தது:

மாவட்டத்தில் 465 ஊரகப் பள்ளிகளில் 39 ஆயிரத்து 50 மாணவா்களுக்கும், 79 நகா்ப்புற பள்ளிகளில் 14 ஆயிரத்து 150 மாணவா்களுக்கும் என மொத்தம் 544 பள்ளிகளில் 53 ஆயிரத்து 200 மாணவா்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஏற்கெனவே, நடைமுறையில் உள்ள காலை உணவு திட்டத்தில் 1,377 பள்ளிகளில் 59 ஆயிரத்து 679 மாணவா்கள் பயனடைந்தனா். தற்போது காலை உணவு விரிவாக்கத் திட்டம் மூலம் மொத்தம் 1921 பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 879 மாணவா்கள் பயன் பெறுகின்றனா் என்றாா் வினோத்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி, மேயா் க. சரவணன், மாநகராட்சி ஆணையா் கே.எம். சுதா, ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநா் சித்ரா, முதன்மைக் கல்வி அலுவலா் வெ. பேபி, கோட்டாட்சியா் வி.எம். திருமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments