FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பற்றவைப்பு மேற்பார்வையாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இந்திய பற்றவைப்புக் கழகத்தின் தென் மண்டலப் பிரிவு நடத்தும் பற்றவைப்பு மேற்பார்வையாளர்கள் பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

இந்திய பற்றவைப்புக் கழகத்தின் தென் மண்டலப் பிரிவு நடத்தும் பற்றவைப்பு மேற்பார்வையாளர்கள் பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து இந்த மையத்தின் பொதுச் செயலர் எஸ். சிங்காரவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய பற்றவைப்புக் கழகத்தின் தென் மண்டலப் பிரிவு செப்டம்பர் 23 முதல் 30-ம் தேதி வரை ஒருவாரக் காலத்துக்கு முழுநேர பற்றவைப்பு மேற்பார்வையாளர் பயிற்சியை திருச்சி பெல் கைலாசபுரம் நகரிய வளாகத்தில் அளிக்க உள்ளது.

Advertisement

Advertisement

பொறியியல் பட்டதாரிகள், இயந்திரவியல் பட்டயப் பொறியாளர்கள் இப்பயிற்சியில் சேரத் தகுதி உடையவர்கள்.

பற்றவைப்பு முறை மற்றும் அதன் பயன்பாடுகள், பற்றவைப்பு வெப்ப முறைகள், பற்றவைப்பு தகுதி முறைகள், பற்றவைப்பு தொழில்நுட்பத்தில் தர உறுதி, பாதுகாப்பு முறைகள் போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

ஆர்வமுள்ளவர்கள் பற்றவைப்புக் கழகத்தின் தென் மண்டல அலுவலகம் அமைந்துள்ள கைலாசபுரம் நகரியத்திலோ அல்லது 0431- 2572988 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும், ட்வ்ண்ஜ்ள்ண்ய்க்ண்ஹ000ஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற இணையதள முகவரியிலோ விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments