பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.2.5 லட்சம் திருட்டு
திருச்சி பஞ்சப்பூர் அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் (பங்க்) வெள்ளிக்கிழமை இரவு ரூ. 2.5 லட்சம் ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி பஞ்சப்பூர் அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் (பங்க்) வெள்ளிக்கிழமை இரவு ரூ. 2.5 லட்சம் ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருவானைக்கா மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஜாபர் மகன் யாசீர் (28). பஞ்சப்பூரில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.
வெள்ளிக்கிழமை வசூலான ரூ. 2.50 லட்சம் ரொக்கத்தை பங்க் ஊழியர்கள் பீரோவில் வைத்துவிட்டு தூங்கியுள்ளனர்.
Advertisement
Advertisement
சனிக்கிழமை அதிகாலை எழுந்து பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ. 2.50 லட்சம் ரொக்கம் திருட்டு போயிருப்பதும், கடந்த சில நாட்களாக அங்கு தங்கியிருந்து பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த யாசீரின் நண்பர் விருதாசலத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் காணாமல் போயிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.