FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சுவாமி ஊர்வலத்தில்  தாக்குதல்:  8 பேர் காயம்

துறையூரில் புதன்கிழமை நடைபெற்ற சுவாமி ஊர்வலத்தில் நடந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர்.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 8:42 am IST
பகிர்:

துறையூரில் புதன்கிழமை நடைபெற்ற சுவாமி ஊர்வலத்தில் நடந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர்.
துறையூர் வடக்கு தெருவைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர்  கோயில் விழாவையொட்டி  புதன்கிழமை சிரசு எடுத்துக் கொண்டு முக்கிய சாலைகள் வழியாக  ஊர்வலம் சென்றனர். அப்போது அம்பலகாரத் தெருவைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் தங்கள் தெரு வழியே ஊர்வலம் செல்ல எதிர்ப்புத் தெரிவித்தனர்.  
இதனால் ஏற்பட்ட தகராறில் இரு சமூகத்தினரும் கல் வீசித் தாக்கிக் கொண்டனர். இதில் சே. லோகநாதன் (24),ரா. திவாகர்(19), ந. பாரத் (30), பா. பாபு (32), ம. தமிழ்  (18) ஆகியோரும், மற்றொரு தரப்பில் பா. சிவா (18),  பாதுகாப்பு பணியில் இருந்த  சிறப்பு எஸ்ஐ குமார், ஏட்டு சஞ்சீவி ஆகிய 8 பேர் காயமடைந்தனர். 
மீண்டும் தாக்குதலில் ஈடுபடாமல் இருக்க போலீஸார் ரோந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments