FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

லால்குடி அருகே நூலகத்தில் வாசிப்பு இயக்கம் தொடக்கம்

திருச்சி மாவட்டம்,  லால்குடி அருகேயுள்ள டால்மியாபுரம்  கிளை நூலகத்தில் வாசகர் வட்ட உதவியுடன் வாசிப்பு இயக்கம் 2022 தொடங்கப்பட்டது.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 8:40 am IST
பகிர்:

திருச்சி மாவட்டம்,  லால்குடி அருகேயுள்ள டால்மியாபுரம்  கிளை நூலகத்தில் வாசகர் வட்ட உதவியுடன் வாசிப்பு இயக்கம் 2022 தொடங்கப்பட்டது.
டால்மியாபுரம் அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளியில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.  பள்ளி மாணவ மாணவிகளுக்கு  புத்தகத்தை பள்ளி தமிழாசிரியை ஞா. அறிவுச்செல்வி வழங்கினார். வாசிப்பின் அவசியம் குறித்து நூலகர் சி.என். சாந்தி சிறப்புரையாற்றினார்.
இதில் உறுப்பினர் சேர்க்கை திட்டத்தின் கீழ் டால்மியா மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 120 பேர் நூலகத்தில் உறுப்பினர்களாக இணைந்தனர்.  நூலகத்துக்கு டால்மியா ரோட்டரி சார்பில்  ரூ. 2500 மதிப்புள்ள புத்தகங்களையும், கல்லக்குடி அரிமா சங்கம் ரூ. 1500 மதிப்புள்ள புத்தகங்களையும் வழங்கினர். வாசகர் வட்டத்  தலைவர்  அ. ஏசுராஜ், துணைத் தலைவர் செல்வராஜ், தலைமையாசிரியர் து. குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூலக பணியாளர் க. விஜயலட்சுமி வரவேற்று, நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments