FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

கிணற்றில் மூழ்கிய  மாணவர் சாவு?

துறையூரில் கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை  தவறி விழுந்து மூழ்கிய மாணவரை தேடும் பணி நடைபெறுகிறது.

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 10:15 am IST
பகிர்:

துறையூரில் கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை  தவறி விழுந்து மூழ்கிய மாணவரை தேடும் பணி நடைபெறுகிறது.
துறையூர் மலையப்பன் சாலையைச் பகுதியைச் சேர்ந்தவர் அரசுப் பேருந்து நடத்துநர் பன்னீர்செல்வம் மகன் அபிஜெய் (14).  தனியார் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவரான இவர் ஞாயிற்றுக்கிழமை பகல் தனது வீட்டருகே வசிக்கும் நண்பர்களுடன் கிணற்றுக்கு குளிக்கச் சென்றார்.  நீச்சல் தெரியாததால் கிணற்றுக்குள் இறங்கி சரிவான பகுதியில் அமர்ந்திருந்த அபிஜெய் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். 
இதைப் பார்த்த  நண்பர்கள் பக்கத்தில் வசிப்போரிடம்  தெரிவிக்க, அவர்கள் போலீஸுக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்தனர். 
இதன் பேரில் அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் அபிஜெய் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  துறையூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments