"போக்சோ' சட்டத்தில் ஒருவர் கைது
திருச்சி, பாலக்கரை கீழகிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த 6 வயது சிறுவனிடம் உடல் மற்றும் மனதளவில் கடந்த சில
திருச்சி, பாலக்கரை கீழகிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த 6 வயது சிறுவனிடம் உடல் மற்றும் மனதளவில் கடந்த சில நாள்களாக மாற்றம் இருந்தது. அது குறித்து கேட்டபோது சிறுவனுக்கு எதையும் விளக்கி கூறத் தெரியவில்லை.
இதையடுத்து பெற்றோர் குழந்தையிடம் அவனது போக்கிலேயே மெதுவாக விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த பாபா என்கிற சக்திவேல் (50) என்பவர், சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஏமாற்றி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியது தெரியவந்தது. இதையடுத்து புகாரின்பேரில், கோட்டை அனைத்து மகளிர் காவல் காவல் நிலைய போலீஸார் போக்சோ (சிறுவர் சிறுமியர் வன்கொடுமை) சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, சக்திவேலை சனிக்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.