மணப்பாறை அருகே ஐந்தரை பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் திருட்டு
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த முள்ளிப்பாடியில் தேசிய நெடுஞ்சாலையோர வீட்டில் வசித்து வருவோர் பழனியப்பன் (66), மகாலெட்சுமி
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த முள்ளிப்பாடியில் தேசிய நெடுஞ்சாலையோர வீட்டில் வசித்து வருவோர் பழனியப்பன் (66), மகாலெட்சுமி (63) தம்பதியினர். சனிக்கிழமை கணவர் கோழி விற்க வெளியூர் சென்றிருந்த நிலையில், மாலையில் மணப்பாறைபட்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு மனைவி சென்றார். ஞாயிற்றுக்கிழமை காலை மனைவி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஐந்தரை பவுன், நகை, ரூ.30 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
புகாரின்பேரில் வையம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். போக்குவரத்து அதிகமுள்ள பகுதியில் நடந்துள்ள இச்சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.