அமைச்சர் இல்ல காதணி விழாவில் முதல்வர் பங்கேற்பு
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜனின் இல்ல காதணி விழாவில், தமிழக முதல்வர்
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜனின் இல்ல காதணி விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர்.
அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜனின் பேரன் பாகுலேயன் காதணிவிழா திருச்சி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, சென்னையிலிருந்து விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.50 மணிக்கு திருச்சி வந்தார்.
அவரை விமானநிலையத்தில், மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, மாநகரக் காவல் ஆணையர் அ. அமல்ராஜ், எம்பி-க்கள் ப.குமார், டி. ரத்தினவேல் உள்ளிட்டோர் மலர்கொத்து அளித்து வரவேற்றனர்.
விமான நிலையத்திலிருந்து கார் மூலம் திருச்சி கலையரங்கத்துக்கு வந்த முதல்வருக்கு, அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜனின் குடும்பத்தினர் வரவேற்பு அளித்தனர். பின்னர், குழந்தை பாகுலேயனை கையில் தூக்கி மகிழ்ந்த முதல்வர், தனது வாழ்த்துக்களையும் குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொண்டார்.
இதுபோல, அமைச்சர்கள் சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர், செல்லூர் கே.ராஜு, கடம்பூர் ராஜு, ஆர். காமராஜ், பாலகிருஷ்ண ரெட்டி, சேவூர் ராமச்சந்திரன், எஸ். வளர்மதி, வி. சரோஜா, வி.எம். ராஜலட்சுமி மற்றும் எம்எல்ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றுது தெரிவித்தனர்.
விழாவில் 15 நிமிஷங்கள் இருந்த முதல்வர் மீண்டும் கார் மூலம் திருச்சி விமானநிலையத்துக்கு வந்து , பிற்பகல் 12.10 மணிக்கு செல்லும் விமானத்தில் சென்னை புறப்பட்டுச் சென்றார்.
முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சி விமானநிலையத்தில் இருந்து கலையரங்கம் வரையில் 700-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக சுப்ரமணியபுரம் பகுதியிலுள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகம் முன்பாக கூடியிருந்த அக்கட்சியினர், முதல்வருக்கு மலர்கொத்துகளை அளித்து வழியனுப்பினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.