சிறுகனூர் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
சிறுகனூர் வாய்ஸ் அறக்கட்டளை, எம்.ஆர்.பாளையம் விரிவாக்க மையத்தின் சார்பில் சிறுகனூர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்பேரணியை தலைமையாசிரியர் ஜெ. அண்ணாத்துரை கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
பேரணியில் லால்குடி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளரும், வாய்ஸ் அறக்கட்டளையின் திட்ட இயக்குநருமான ஏ.கிரகோரி, வனச்சரகர் எஸ். பழனிவேல் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள்பங்கேற்றனர். முன்னதாக, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.