FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

வீடுகளில் திருடி வந்த இருவர் கைது: 58  சவரன் நகை மீட்பு

திருச்சி மாவட்டம், முசிறி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் திருடிய இருவரை முசிறி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 58 சவரன் தங்க நகையினை மீட்டனர்.

Updated On : 7 ஜூன் 2018, 9:27 am IST
பகிர்:

திருச்சி மாவட்டம், முசிறி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் திருடிய இருவரை முசிறி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 58 சவரன் தங்க நகையினை மீட்டனர்.
முசிறி அருகே வீரமணிப்பட்டியில் பார்த்தீபன் என்பவர் வீட்டில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி பூட்டிருந்த வீட்டில்  திருடிக்கொண்டிருந்த பெண்ணை அப்பகுதி மக்கள் பிடித்து முசிறி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்தப் பெண் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த லதா (39), திருச்சியைச் சேர்ந்த ரெங்கநாதன் (31) என்ற இளைஞருடன் முசிறி பகுதியில் பல்வேறு வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தைத் திருடி வந்தது தெரிய வந்தது. லதாவின் செல்லிடப்பேசி மூலம் தொடர்பு கொண்டு ரெங்கநாதனை குளித்தலை பகுதியில் போலீஸார் பிடித்தனர். அவர்களை முசிறி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து 58 சவரன் நகையை போலீஸார் மீட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments