பயணியிடம் பர்ஸ் திருடியவர் கைது
பயணியிடம் பர்ஸ் திருடியதாக மதுரையைச் சேர்ந்தவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
பயணியிடம் பர்ஸ் திருடியதாக மதுரையைச் சேர்ந்தவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
திருச்சி தென்னூர் ரகுமானியாபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(30), சத்திரம் பேருந்து நிலையத்துக்கு நகரப் பேருந்தில் சென்றார். பேருந்தை விட்டு கீழே இறங்கி பார்த்தபோது அவரது பேண்ட் பாக்கெட்டிலிருந்த பர்ஸை காணவில்லை. அவருக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் அவசரமாக கீழே இறங்கியதால் சந்தேமடைந்து அவரிடம் கேட்ட போது முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
பேருந்து நிலைய புறக்காவல் நிலைய போலீஸாரிடம் புகார் தெரிவித்ததையடுத்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மதுரை செல்லூர் அயின்ஷாபுரத்தைச் சேர்ந்த மு.கிருஷ்ணன்(44) என்பதும், பர்ஸை எடுத்து அதிலிருந்த ரூ. 6,500 திருடியது தெரிய வந்தது.
இதுகுறித்து கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணனைக் கைது செய்து, பணத்தை மீட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.