FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கிணற்றில் தவறி விழுந்த தாய், காப்பாற்ற முயன்ற  மகன் உயிருடன் மீட்பு

துறையூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த தாயைக் காப்பாற்ற முயன்ற இறங்கிய மகன் ஆகியோரை தீயணைப்புத் துறையினர் புதன்கிழமை உயிருடன் மீட்டனர். 

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

துறையூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த தாயைக் காப்பாற்ற முயன்ற இறங்கிய மகன் ஆகியோரை தீயணைப்புத் துறையினர் புதன்கிழமை உயிருடன் மீட்டனர். 
சொக்கநாதபுரம் காவிரி நகரைச் சேர்ந்த சோழமுத்து மகன் தனசேகரன். இவரது தாயார் சின்னம்மாள்(60). இவர் வீட்டருகே இவர்களுக்குச் சொந்தமான 100 அடி ஆழம் கொண்ட கிணற்றின் கரை மேட்டில் இருந்த இலைதழைகளை வெட்டிய போது தவறி கிணற்றில் விழுந்தார். 5 அடி ஆழத்தில் தண்ணீர் இருந்ததால் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரெ.நாகராஜன் தலைமையிலான குழுவினர் சின்னம்மாள், தனசேகரன் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments