திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள்
திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியின்போது வைக்கப்படும் சிலைகளை கரைக்க வேண்டிய இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியின்போது வைக்கப்படும் சிலைகளை கரைக்க வேண்டிய இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
தமிழகத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின்போது களிமண்ணால் செய்யப்பட்டவிநாயகர் சிலைகளை பூஜித்த பிறகு நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கம் உள்ளது. ஆனால், அண்மைக்காலமாக பிளாஸ்டர் ஆப்பாரிசனால் செய்யப்பட்ட ரசாயன வர்ணப் பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் பழக்கம் பரவி வருகிறது. இதனால் நீர்நிலைகள் மாசுபடுகின்றன.
களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும், எவ்வித ரசாயன கலவையற்றதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும். இத்தகைய சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்கலாம். அரசால் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளைக் கரைக்க வேண்டும்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளைக் கரைக்கத் தேர்வு செய்யப்பட்ட இடங்கள் : திருச்சி - மேலச்சிந்தாமணியிலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியிலுள்ள காவிரியாறு, சோமரசம்பேட்டை -உய்யக்கொண்டான் வாய்க்கால், மண்ணச்சநல்லூர்- பெருவளை வாய்க்கால், ராம்ஜி நகர்- கட்டளைவாய்க்கால், லால்குடி - அய்யன் வாய்க்கால், திருவெறும்பூர்,துவாக்குடி - வேங்கூர்காவிரியாறு, நவல்பட்டு, சிறுகனூர், சமயபுரம், முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர், துறையூர், தாத்தையங்கார்பேட்டை பகுதிகள்- - காவிரியாறு, உப்பிலியபுரம்- புளியஞ்சோலை வாய்க்கால், காவிரியாறு, மணப்பாறை- மாமுண்டியாறு, வையம்பட்டி- பொன்னணியாறு அணை, துவரங்குறிச்சி- பூதநாயகி அம்மன் கோயில் குளம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.