FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

லால்குடியில் ரயிலை மறித்து பயணிகள் போராட்டம்

லால்குடியில் ரயிலை மறித்து பயணிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.        

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

லால்குடியில் ரயிலை மறித்து பயணிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.                  மதுரையிலிருந்து திண்டுக்கல், திருச்சி, லால்குடி வழியாக விழுப்புரம் வரை செல்லும் பயணிகள் ரயிலில் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோர் அதிகளவில் பயண் சென்று வருகின்றனர். சில மாதங்களாக கல்லகம் முதல் காட்டூர் ரயில் நிலையம் வரையில் உள்ள ரயில் தண்டவாள பாதையில் சீரமைப்புப் பணிகள் நடப்பதால் இந்த பயணிகள் ரயில் லால்குடி ரயில் நிலையத்தில் தினசரி ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்று செல்கிறது.  காலதாமதம் குறித்த பயணிகளின் கேள்விக்கு நிலைய அதிகாரிகள் சரிவர விளக்கம் அளிக்கவில்லையெனக் கூறப்படுகிறது. 
இதையடுத்து புதன்கிழமை காலை மதுரையிலிருந்து விழுப்புரம் வரை செல்லும் பயணிகள் ரயிலை லால்குடியில் 5 பெண்கள் உள்பட 50க்கும் அதிகமான பயணிகள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து செல்ல விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென ரயில்வே அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டனர். சுமார் ஒரு மணி நேர தாமதத்துக்குப் பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments