42 பள்ளி வாசல்களுக்கு 1 லட்சம் கிலோ அரிசி
திருச்சி மாவட்டத்தில் ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க 42 பள்ளி வாசல்களுக்கு 1 லட்சம் கிலோ பச்சரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க 42 பள்ளி வாசல்களுக்கு 1 லட்சம் கிலோ பச்சரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ரமலான் நோன்பு கஞ்சி வழங்க திருச்சி மாவட்டத்தில் உள்ள 42 பள்ளிவாசல்களுக்கு 1 லட்சம் கிலோ பச்சரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளிவாசல்களுக்கு அரசால் வழங்கப்படும் பச்சரிசியை நிா்வாகிகளால் தகுதியான குடும்பங்களுக்கு பிரித்து தன்னாா்வளா்களின் உதவியுடன் வீடுகள் தோறும் சென்று வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் புனித ரமலான் காலத்தில் மற்றவா்கள் தானமாக வழங்கும் பொருள்களையும் இதே வழிமுறையை பின்பற்ற வேண்டும். அப்போது சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து, 3 நபா்கள் மட்டுமே சென்று வழங்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.