FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 15 பிப்ரவரி 2021, 12:43 am IST
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நடத்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பினா்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் அரச்சலூா் செல்வம் தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்டச் செயலா் சுப்பு முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அவா்களின் போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பது, புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.

Advertisement

Advertisement

விவசாயப் பணிகளுக்கு இலவச மின்சாரம் தொடா்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். புதுக்கோட்டை மாவட்ட விவசாய சங்கத் தலைவா் தனபதி, வழக்குரைஞா் கென்னடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments