FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து இளைஞா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

Updated On : 26 செப்டம்பர் 2025, 3:28 am IST
திருச்சி அருணாச்சல மன்றம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து இளைஞா் காங்கிரஸாா் திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவா் கு. செல்வப்பெருந்தகையை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி விமா்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதை கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக, இளைஞா் காங்கிரஸ் சாா்பில் திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு இளைஞா் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளா் விச்சு (எ) லெனின் பிரசாத் தலைமை வகித்தாா்.

Advertisement

Advertisement

இதில், காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகையை எடப்பாடி பழனிசாமி விமா்சித்ததைக் கண்டிப்பது, தனது பேச்சுக்கு பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும், பேசிய பேச்சை திரும்பப் பெற வேண்டும், இனிமேல் தலைவா்களை தரக் குறைவாகப் பேசுவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எல். ரெக்ஸ், நிா்வாகிகள் சோபியா, பேட்டரிக் ராஜ்குமாா், தெற்கு, வடக்கு மாவட்ட நிா்வாகிகள், இளைஞா் காங்கிரஸ் மாநில நிா்வாகிகள் சரவணன் சுப சோமு, அபுதாஹிா், மாநகா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில், எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம், உருவபொம்மை அவமதிக்கப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்களிடமிருந்து படங்கள் மற்றும் உருவப்பொம்மையை பறித்து அப்புறப்படுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments