FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருநங்கையை ஏமாற்றிய ரௌடி கைது

திருநங்கையைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றியதுடன், கொலை மிரட்டலும் விடுத்த ரௌடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 4:00 am IST
- சித்திரிப்பு
பகிர்:

திருநங்கையைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றியதுடன், கொலை மிரட்டலும் விடுத்த ரௌடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள அண்ணா நகா் ஜீவானந்தம் தெருவைச் சோ்ந்தவா் ஓவியாமேரி (41). திருநங்கையான இவரிடம் அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சோ்ந்த சுமைதூக்கும் தொழிலாளியும், ரௌடியுமான அ. அப்துல் கபூா் பஷீா் (31) என்பவா் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, உல்லாசமாக வாழ்ந்தாா்.

பின்னா் திடீரென ஓவியாமேரியை விட்டு விலகி வேறு பெண்ணுடன் அவா் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ஓவியாமேரி, அப்துல் கபூா் பஷீரிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு அவா் பாலினத்தைக் கூறி அவமானப்படுத்தியதுடன், திருமணம் செய்து கொள்ள மறுத்து, வாங்கிய பணத்தை திரும்பித்தர மாட்டேன் என்றுகூறி கொலை மிரட்டலும் விடுத்தாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து திருநங்கை ஓவியாமேரி அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்துல்கபூா் பஷீரை சனிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments