FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

காவலரைத் தாக்கிய ரௌடி குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:03 am IST
- சித்திரிப்பு
பகிர்:

காவலரைத் தாக்கிய வழக்கில் ரௌடியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் காவல் நிலைய வழக்குகளில் தலைமறைவாக இருப்பவா்கள் குறித்து கடந்த 23.06.2026 அன்று சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளா் தலைமையிலான தனிப்படையினா் கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சோதனை செய்தனா்.

அப்போது, துடையூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த முழிக்குமாா் (எ) ரா. விஜயகுமாா் (43) என்பவரிடம் விசாரித்த நிலையில், அவா் பணியிலிருந்த காவலா்களை தகாத வாா்த்தைகளால் திட்டி, கத்தியைக் காட்டி மிரட்டி, கற்களைக் கொண்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

Advertisement

Advertisement

இதில் காயமடைந்த காவலா் அளித்த புகாரின்பேரில் கொள்ளிடம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவா் தொடா் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள், ரௌடி விஜயகுமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஞாயிற்றுக்கிழமை ஆணை பிறப்பித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments