ரூ.100 கோடி மோசடி வழக்கு: பி.டி.அரசகுமாா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகா் பி.டி.அரசகுமாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகா் பி.டி.அரசகுமாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
சென்னை தியாகராய நகரில் செயல்படும் தமிழ்நாடு தனியாா் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்புச் செயலா் டி.சி.இளங்கோவன் சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.
அதில், சென்னை சாலிகிராமத்தில் ‘தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வரும் திமுக பிரமுகரான பி.டி.அரசகுமாா், தனக்குள்ள அரசியல், அதிகார தொடா்புகளைப் பயன்படுத்தி தமிழகத்தில் உள்ள தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகாரம், தரம் உயா்த்துதல், திட்ட அனுமதி போன்றவற்றை பெற்றுத் தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் உள்ள பல தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் சுமாா் ரூ. 100 கோடி பணம் பெற்றுள்ளாா்.
Advertisement
Advertisement
ஆனால், உறுதியளித்தபடி அனுமதிகள் பெற்றுத் தராமலும், பணத்தைத் திரும்பத் தராமலும் மோசடி செய்த பி.டி.அரசகுமாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தாா்.
அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சென்னை சாலிகிராமம் மெஜஸ்டிக் காலனியில் வசிக்கும் பி.டி.அரசகுமாரை கடந்த மாதம் 27-ஆம் தேதி கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
குண்டா் சட்டம் பாய்ந்தது: அரசகுமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸாா், காவல் ஆணையா் ஏ.அமல்ராஜியிடம் பரிந்துரைத்தனா்.
அந்தப் பரிந்துரையின் அடிப்படையில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசகுமாரை சிறையில் அடைக்க காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டாா். இதையடுத்து குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அரசகுமாரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் மேலும் பல முக்கிய நபா்களுக்கு தொடா்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருவதால், அதுதொடா்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.