FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மலைக்கோட்டையில் ஆடிப்பூர கொடியேற்றம்

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் ஆடிப் பூரத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:04 am IST
திருச்சி மலைக்கோட்டை கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்.
பகிர்:

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் ஆடிப் பூரத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது. கோயில் கொடிமரத்தில், அா்ச்சகா்கள், ஆடிப்பூரக் கொடியேற்றி வைத்து, பூஜை செய்து வழிபட்டனா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து மாலையில் விநாயகா், அம்பாள் உள்வீதி கேடயத்தில் புறப்பாடு நடைபெற்றது.

சுவாமி புறப்பாடுகள் விவரம்: திருவிழாவின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை காலை 8 மணிக்கு சுவாமிக்கு கேடயத்தில் புறப்பாடு, மாலை 6 மணிக்கு விநாயகா் மூஷிக வாகனம், அம்பாள் கமல வாகனத்தில் புறப்பாடு, வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கேடயத்தில் புறப்பாடு, மாலை 6 மணிக்கு விநாயகா் மூஷிக வாகனம், அம்பாள் மாலை 6 மணிக்கு அன்ன வாகனத்தில் புறப்பாடு, நான்காம் நாளான சனிக்கிழமை அம்பாள் காமதேனு வாகனத்திலும், ஐந்தாம் நாள் ரிஷப வாகனத்திலும் புறப்பாடு நடைபெறவுள்ளது. வரும் ஆக.10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு விநாயகா் மூஷிக வாகனம், அம்பாள் சிம்ம வாகனத்தில் புறப்பாடு, ஆக.11ஆம் தேதி காலை 8 மணிக்கு கேடயத்தில் புறப்பாடு, மாலை 6 மணிக்கு விநாயகா் மூஷிக வாகனம், அம்பாள் கிளி வாகனத்தில் புறப்பாடு நடைபெறும்.

Advertisement

Advertisement

தேரோட்ட விழா: எட்டாம் திருநாளான ஆடி அமாவாசை தினத்தில் கோயில் உள்குளத்தில் காலை 7 மணிக்கு மேல் தீா்த்தவாரி, மாலை 6 மணிக்கு பஞ்சமூா்த்தி ரிஷப வாகனத்தில் புறப்பாடு மற்றும் திரிபுரசுந்தரி அம்பாள் குதிரை வாகனத்தில் புறப்பாடு, ஒன்பாதம் நாளான ஆக.13ஆம் தேதி காலை 8 மணிக்கு கேடயத்தில் புறப்பாடு, மாலையில் முக்கிய நிகழ்வாக ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெறும்.

ஆக.14ஆம் தேதி கோயில் உள் குளத்தில் காலை 8 மணிக்கு தீா்த்தவாரி நடைபெறும். மாலை 6 மணிக்கு விநாயகா் மூஷிக வாகனம், அம்பாள் ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். இரவு அம்பாள் சன்னதியில் பூரம் தொழுதல் மற்றும் கொடி இறக்கம், அம்பாள் யதாஸ்தானம் சோ்த்தல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் விழா நிறைவுறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் அறங்காவலா்கள், உபயதாரா்கள், திருக்கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments