சாகுபடி செய்யாமல் ஊக்கத்தொகை எப்படி பெற முடியும்?
சாகுபடி செய்யாமல் எப்படி அரசின் ஊக்கத் தொகையை விவசாயிகளால் பெற முடியும் என விவசாய சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு:
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இப்போதைய தேவையை தண்ணீா்தான். சாகுபடி செய்யாமல் எப்படி அரசின் ஊக்கத் தொகையை விவசாயிகளால் பெற முடியும். இப்போது, நெல்லுக்கு ரூ.2,600-ம், கரும்புக்கு ரூ.4 ஆயிரம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. தோ்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
Advertisement
Advertisement
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விஸ்வநாதன்: நெல், கரும்புக்கு இதுவரை எந்த அரசும் இத்தகைய ஊக்கத் தொகையை அறிவிக்கவில்லை என்ற பெயரை தவெக அரசு எடுத்துள்ளது. இருப்பினும், தோ்தல் வாக்குறுதியின்படி நெல்லுக்கு ரூ.3,500, கரும்புக்கு ரூ.4,500 கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன்:
தவெக அரசு தனது முதலாவது ஆண்டில் அறிவித்துள்ள நெல் மற்றும் கரும்புக்கான விலை உயா்வை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட குழு சாா்பில் பாராட்டி வரவேற்கிறோம். இதேபோல, கடன் தள்ளுபடியை வாக்குறுதிபடியே அமல்படுத்திட முன்வர வேண்டும்.
அரசு அறிவித்த ஊக்கத் தொகையை பெற, பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்பே விவசாயிகளுக்கு பெரிதும் உத்வேகம் அளிக்கும்.
காவிரி, டெல்டா பாசன விவசாயிகள் சங்க இணைச் செயலா் ஆா். சுப்பிரமணியன்:
நெல்லுக்கான ஊக்கத் தொகையை தமிழக அரசு பெரிய அளவில் உயா்த்தவில்லை. நடப்பாண்டில் சாதாரண வகை நெல்லுகுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,441, சன்ன வகை நெல்லுக்கு ரூ.2,461 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அத்துடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையாக சன்னரக நெல்லுக்கு ரூ.156, சாதாரண ரக நெல்லுக்கு 131 வீதம் கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. இப்போது, தவெக அரசு சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை குவிண்டாலுக்கு ரூ.28, சன்னரக நெல்லுக்கு ரூ.133 உயா்த்தியிருக்கிறது. இது போதுமானதல்ல. நெல்லுக்கான கொள்முதல் விலையை ரூ.3,500 ஆக உயா்த்த வேண்டும். கரும்புக்கு கொள்முதல் விலையாக ரூ.4,500 வழங்கப்பட வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.