FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நெல்லுக்கு நடப்பாண்டில் ரூ.3000, அடுத்த ஆண்டில் ரூ.3500 வீதம் கொள்முதல் விலை வழங்க வேண்டும்: அன்புமணி

நெல்லுக்கு நடப்பாண்டில் ரூ.3000, அடுத்த ஆண்டில் ரூ.3500 வீதம் கொள்முதல் விலை வழங்க வேண்டும் என பாமக தலைவர் வலியுறுத்தியிருப்பது குறித்து...

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 3:18 pm IST
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் - டிஎன்எஸ்
பகிர்:

நெல்லுக்கு நடப்பாண்டில் ரூ.3000, அடுத்த ஆண்டில் ரூ.3500 வீதம் கொள்முதல் விலை வழங்க வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெள்யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகை சன்ன ரக நெல்லுக்கு ரூ.289, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.159 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல், கடந்த ஆண்டில் கரும்புக்கான ஊக்கத்தொகை ரூ.709.50 ஆக உயர்த்தப்பட்டு டன்னுக்கு ரூ.4000 ஆக வழங்கப்படும் என்று தவெக அரசு அறிவித்திருக்கிறது. உண்மையில் சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை ரூ.28 மட்டும் தான் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது போதுமானதல்ல.

Advertisement

Advertisement

நெல்லுக்கான ஊக்கத்தொகையை தமிழ்நாடு அரசு பெரிய அளவில் உயர்த்தவில்லை. நடப்பாண்டில் சாதாரண வகை நெல்குக்கு குவிண்டாலுக்கு ரூ.2,441, சன்ன வகை நெல்லுக்கு ரூ.2,461 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அத்துடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையாக சன்னரக நெல்லுக்கு ரூ.156, சாதாரண ரக நெல்லுக்கு 131 வீதம் கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. இப்போது தவெக அரசு சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை குவிண்டாலுக்கு ரூ.28, சன்னரக நெல்லுக்கு ரூ.133 உயர்த்தியிருக்கிறது. இதன் காரணமாக நெல்லுக்கான கொள்முதல் விலை சன்னரக நெல்லுக்கு ரூ.2750, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.2600 ஆக உயர்ந்திருக்கிறது. இது போதுமானதல்ல.

சாதாரண நெல்லுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தியுள்ளது. ஆனால், தமிழக அரசு அதன் ஊக்கத்தொகையை, மத்திய அரசால் உயர்த்தப்பட்டதை விட பாதிக்கும் குறைவாகவே உயர்த்தியுள்ளது. சன்னரக நெல்லுக்கான ஊக்கத்தொகை ரூ.289 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல் வகைகளில் 95 விழுக்காட்டுக்கும் கூடுதலான நெல் சாதாரண ரகங்களைச் சேர்ந்தவை ஆகும். அதனால் சாதாரண ரக நெல்லுக்கான கொள்முதல் விலை தான் கூடுதலாக உயர்த்தப்பட வேண்டும்.

அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை வெறும் ரூ.28 மட்டும் உயர்த்தி விட்டு, மிகக் குறைந்த அளவில் கொள்முதல் செய்யப்படும் சன்னரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை ரூ.133 உயர்த்துவதால் யாருக்கும் பயனில்லை. ஊக்கத்தொகையை உயர்த்தி விட்டோம் என்று கணக்கு காட்டி பெருமிதம் பேசுவதற்காக மட்டும் தான் தமிழக அரசின் இந்த அறிவிப்பு பயன்படும்.

ஒதிஷாவில் கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.800 வீதமும், கேரளத்தில் ரூ.650 வீதமும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நடப்பாண்டில் அந்த மாநிலங்களில் ஊக்கத்தொகை இன்னும் கூடுதலாக உயர்த்தப்படலாம். அவற்றுடன் ஒப்பிடும் போது தமிழக அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை போதுமானதல்ல.

தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.2300 முதல் ரூ.2400 வரை செலவாகிறது. அத்துடன் கூடுதலாக ரூ.200 மட்டும் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிப்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல. எனவே, நடப்பாண்டில் சாதாரண வகை நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3000 கிடைக்கும் வகையில் ஊக்கத் தொகையை ரூ.559 ஆக உயர்த்த வேண்டும். அதேபோல், அடுத்த ஆண்டில் தவெகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு நெல்லுக்கான கொள்முதல் விலையை ரூ.3500 ஆக உயர்த்த வேண்டும்.

கரும்புக்கான கொள்முதல் விலையை பொறுத்தவரை 2025 - 26 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து வழங்கப்பட்ட கரும்புக்கு மத்திய அரசால் டன் ஒன்றுக்கு ரூ. 3290.50 கொள்முதல் விலை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் சார்பில் ஊக்கத்தொகை எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முன் 2024 -25ஆம் ஆண்டில் கரும்புக்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகையான ரூ.349 -யுடன் கூடுதலாக ரூ.360.50 சேர்த்து ரூ.709.50 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டில் கரும்புக்கு டன்னுக்கு ரூ.4000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த ஊக்கத் தொகை அறிவிப்பு விவசாயிகளுக்கு முழுமையான மகிழ்ச்சியை அளிக்காது என்றாலும், மனநிறைவு அளிக்கும்.

2026-27 ஆம் ஆண்டுக்கான அரவைப் பருவம் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. வரும் பருவத்தில் கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு மத்திய அரசின் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3383 அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கடந்த ஆண்டுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத் தொகையை சேர்த்தால் டன்னுக்கு ரூ.4092 கிடைக்கும். கடந்த ஆண்டுக்கான ஊக்கத்தொகையுடன் நடப்பாண்டில் ரூ.408 உயர்த்தி வழங்கினால் கரும்புக்கு கொள்முதல் விலையாக ரூ.4500 கிடைக்கும். எனவே வரும் அரவைப் பருவத்தில் கரும்புக்கான கொள்முதல் விலையுடன் மாநில அரசின் ஊக்கத் தொகையாக ரூ. 1117 சேர்த்து வழங்க வேண்டும். அதற்கான அறிவிப்பை இப்போதே வெளியிட வேண்டுமென அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

summary

The Tamil Nadu Government has increased the State incentive for paddy procured during the current year to Rs. 289 per quintal for fine varieties and Rs. 159 per quintal for common varieties.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments