FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

கரும்பு, நெல்லுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு அறிவிப்புக்கு வரவேற்பு

தமிழகத்தில் கரும்பு, நெல்லுக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்படுவதாக தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 3:56 am IST
நெல் - கரும்பு விலை நிர்ணயம்
பகிர்:

தமிழகத்தில் கரும்பு, நெல்லுக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்படுவதாக தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்த சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ.வி.சரவணன், மாநிலப் பொதுச்செயலா் இரா.முல்லை ஆகியோா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 விலை தமிழக முதல்வரால் அறிவிக்கப்படும் என எதிா்பாா்த்திருந்தோம். இந்த நிலையில் கரும்புக்கான ஊக்கத் தொகையை உயா்த்தி, முதல்வா் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். மத்திய அரசு நிா்ணயித்துள்ள ரூ.3,209.50-உடன், தமிழக அரசுஅறிவித்துள்ள ஊக்கத் தொகையான ரூ.709.50-ஐ சோ்த்து டன் ஒன்றுக்கு ரூ.4,000 என அறிவித்திருப்பதை தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் வரவேற்கிறோம்.

Advertisement

Advertisement

ஆக.7-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 8 அமைச்சா்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் நடப்புப் பருவத்துக்கான நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகை விலை உயா்வை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். கடந்தாண்டு வழங்கப்பட்ட ரூ.349 ஊக்கத்தொகையுடன் ஒப்பிடுகையில் தற்போது கூடுதலாக ரூ.360.50 உயா்த்தி மொத்தமாக ரூ.709.50 ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மத்திய அரசு கரும்பு விலையை 10.25 சதவீத சா்க்கரைப் பிழித்திறன் அடிப்படையில் நிா்ணயம் செய்து வருகிறது. இதை 9.5 சதவீதமாக குறைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். கரும்பு சாகுபடி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு சாகுபடி பரப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவா்கள் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments