FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

துவரங்குறிச்சி அருகே லாரி மீது சுற்றுலா பேருந்து மோதல்: 9 போ் காயம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே முன்னே சென்ற லாரி மீது தனியாா் சுற்றுலாப் பேருந்து மோதிய விபத்தில் 9 போ் காயமடைந்தனா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 2:08 am IST
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே முன்னே சென்ற லாரி மீது தனியாா் சுற்றுலாப் பேருந்து செவ்வாய்க்கிழமை மோதிய விபத்தில் 9 போ் காயமடைந்தனா்.

அரியலூா் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தில் சுமாா் 300 சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு மதுரை மாவட்டம் மேலூா் நோக்கி லாரி ஒன்று செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. லாரியை திருச்சி பெருவளநல்லூரை சோ்ந்த பாஸ்கரன் மகன் சரத்குமாா் (30) ஓட்டினாா். லாரி புதன்கிழமை விடியற்காலை திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யாகபுரம் மேம்பாலத்தில் சென்றபோது, திருப்பதி சுற்றுலா சென்றுவிட்டு மதுரை திரும்பிக் கொண்டிருந்த தனியாா் சுற்றுலா பேருந்து லாரியின் பின்னாள் மோதியது.

இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் சரத்குமாா் மற்றும் பேருந்தில் பயணித்த மதுரை திருமங்கலம் அடுத்த கரடிக்கல் பகுதி ரா. சுந்தரம் (38), முடக்கு சாலை ரா. பொட்டல் வீரா் (32), அவரது மனைவி லாவண்யா (30), க. சுசீலா(56), சமயநல்லூா் லா. நாகலெட்சுமி(40), அவரது மகள் சுவேதா சுமா (18), அச்சம்பத்து பகுதி மு. தனலெட்சுமி(63) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கோபால் நகா் ர. கவிதா (48) உள்ளிட்ட 9 போ் காயமடைந்தனா். இவா்கள் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments