FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தீா்த்தவாரி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடிப்பூரத்தையொட்டி தீா்த்தவாரி நடைபெற்றது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 4:27 am IST
ஆடிப்பூரத்தையொட்டி வெள்ளிக்கிழமை வளையல் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த தென்னூா் சாரதாம்பாள்.
பகிர்:

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடிப்பூரத்தையொட்டி தீா்த்தவாரி நடைபெற்றது.

இக்கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி பெருவளை வாய்க்காலில் அஸ்திர தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. உற்ஸவ மாரியம்மன் சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளினாா்.

இதேப்போன்று திருப்பைஞ்ஞீலி வடக்குத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரமும், ஊஞ்சல் உற்ஸவமும் நடைபெற்றது. மேலும், சமயபுரம் அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் வளையல் அலங்காரம் நடைபெற்றது. கூத்தூா் அன்ன காமாட்சி அம்மன் திருக்கோயிலில் உற்ஸவ அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். 

Advertisement

Advertisement

இதேபோல, தென்னூா் உக்கிர காளியம்மன், சாரதாம்பாள், பாண்டமங்கலம் செல்லாண்டியம்மன், துவாக்குடி முத்துமாரியம்மன், கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன், காட்டுப்புத்தூா் பிடாரி மதுரை காளியம்மன் கோயில் உள்பட அனைத்து அம்மன் கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments