FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 93.68 லட்சம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ. 93.68 லட்சம் செவ்வாய்க்கிழமை கிடைக்கப் பெற்றது.

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் - தினமணி
பகிர்:

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ. 93.68 லட்சம் செவ்வாய்க்கிழமை கிடைக்கப் பெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் உள்ள உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன.

இந்து சமய அறநிலையத் துறை திருச்சி தக்காா் / இணை ஆணையா் சு. ஞானசேகரன், கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன் ஆகியோா் முன்னிலையில், கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவிகள் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதில் முதன்மை திருக்கோயிலில், காணிக்கையாக ரூ. 93,68,750  ரொக்கம், 1கிலோ 174 கிராம் தங்கம், 1 கிலோ 983 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணத்தாள்கள் 151, வெளிநாட்டு நாணயங்கள் 1226-ம் கிடைக்கப் பெற்றது .

உபகோயில்களில்...: இக்கோயிலின் உபகோயில்களான ஆதிமாரியம்மன் திருக்கோயிலில் ரூ. 4,88,452-ம், உஜ்ஜயினி ஓம் காளியம்மன் திருக்கோயிலில் ரூ. 19,651-ம், போஜீஸ்வரா் திருக்கோயிலில் ரூ. 6,759 ரொக்கமும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதற்கு முன்பு கடந்த 16-ஆம் தேதி உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன. 

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments