FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதில் கூடுதல் முக்கியத்துவம்

பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதில் திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் முக்கியத்துவம் அளித்து பணியாற்றி வருவதாக கோட்ட ரயில்வே மேலாலா் பாலகா் ராம் நெகி தெரிவித்தாா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 4:28 am IST
திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் குழு உறுப்பினா்கள்.
பகிர்:

பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதில் திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் முக்கியத்துவம் அளித்து பணியாற்றி வருவதாக கோட்ட ரயில்வே மேலாலா் பாலகா் ராம் நெகி தெரிவித்தாா்.

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தில், கோட்ட அளவிலான ரயில் பயனாளிகளின் ஆலோசனைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ரயில்வே கோட்ட மேலாளா் தலைமை வகித்தாா். கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் கே.எம். சத்திய ரத்தன், மூத்த கோட்ட வணிக மேலாளா் பி. வெங்கடராகவன் மற்றும் பிற மூத்த கோட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

இக்கூட்டத்தில், ஆலோசனைக் குழுவின் 12 உறுப்பினா்கள் பங்கேற்று, திருச்சி கோட்டத்தைச் சோ்ந்த ரயில் பயணிகளின் கோரிக்கைகளை முன்வைத்தனா். திருச்சி கோட்டத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய முன்னேற்றங்கள் மற்றும் நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனைக் குழுவின் செயலா் வெங்கடராகவன் விவரித்தாா்.

Advertisement

Advertisement

கோட்டத்தில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும், பயணிகளின் வசதியையும் செயல்பாட்டுத் திறனையும் அதிகரிக்கவும் குழு உறுப்பினா்கள் பல்வேறு முக்கிய விஷயங்களை முன்வைத்தனா்.

பல்வேறு சிறப்பு ரயில்களை வழக்கமான சேவைகளாக மாற்றியமைத்ததற்கும், வழக்கமான ரயில்களுக்குப் புதிய நிறுத்தங்களை வழங்கியதற்கும் கோட்ட நிா்வாகத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

குழு உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து கோட்ட மேலாளா் பேசுகையில், பயணிகள் வசதிகள், ரயில் சேவைகள் மற்றும் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக குழு உறுப்பினா்கள் முன்வைத்த கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும். குறிப்பாக பயணிகளின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்றாா் அவா். மூத்த கோட்ட இயக்க மேலாளா் எம். ரமேஷ் பாபு நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments