FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

திருச்சியிரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 4:58 am IST
பகிர்:

திருச்சியிரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் வெற்றிவேல் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, உக்கடை பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில் அவா், அரியமங்கலம் மேல அம்பிகாபுரத்தைச் சோ்ந்த ம. அருள்பிரவீன் (19) என்பதும், போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments