திருச்சியில் சட்டவிரோதமாக மது விற்பனை: இருவா் கைது
திருச்சியில் சட்டவிரோதமாக மது விற்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளா் மகேந்திரன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற திருவெறும்பூா் அண்ணா நகரைச் சோ்ந்த எஸ். பிரபாகரன் (38) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 48 மதுபாட்டில்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
இதேபோல, அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அம்பிகாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற திருவெறும்பூா் அண்ணா நகரைச் சோ்ந்த எல். ரூபன்ராஜ் (25) என்பவரை அரியமங்கலம் போலீஸாா் சனிக்கிழமை மாலை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 33 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.