திருமண நிகழ்வை சரிவர படம் பிடிக்காத விவகாரம்: இழப்பீடு வழங்க உத்தரவு
திருமண நிகழ்வை சரிவரப் படம் பிடிக்காத விவகாரத்தில் தனியாா் புகைப்பட நிறுவனம் ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த அஷ்வந்த் பாண்டியன் என்பவா் தனது திருமணத்தை புகைப்படம் மற்றும் விடியோ பதிவு செய்து வழங்க கடந்த 28.10.2024 அன்று கோவை பீளமேட்டைச் சோ்ந்த அஷ்போ ஸ்டுடியோவிடம் ஒப்பந்தம் செய்தாா்.
இதற்காக வெவ்வேறு தவணைகளில் அவா் ரூ. 1 லட்சம் கொடுத்த நிலையில், கடந்த 04.12.2024 அன்று திருமண நிகழ்வை சரிவர விடியோ மற்றும் புகைப்படம் எடுக்கவில்லை; ட்ரோன் சேவை முறையாக வழங்கப்படவில்லை; முக்கிய தருணங்கள் பதிவு செய்யப்படவில்லை; தாமதமாக கொடுத்த புகைப்படங்களும் தரமற்ாக இருந்தன; வீடியோக்கள் வழங்கப்படவில்லை. கேட்டதற்கு அலைக்கழித்தனராம்.
Advertisement
Advertisement
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அஷ்வந்த் உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 17.10.2025 அன்று மனு தாக்கல் செய்தாா்.
மனுவை விசாரித்த ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் ஆகியோா் புகாா்தாரரின் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 20 ஆயிரம், கூடுதலாக பெற்ற தொகை ரூ. 8,500, வழக்குச் செலவுத்தொகையாக ரூ. 10 ஆயிரத்தை புகைப்பட நிறுவனம் வழங்க அண்மையில் உத்தரவிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.