FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

விபத்தில் இறந்த பல் மருத்துவரின் குடும்பத்துக்கு ரூ.1.04 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

விபத்தில் இறந்த பல் மருத்துவரின் குடும்பத்துக்கு ரூ.1.04 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

Updated On : 19 ஜூலை 2026, 1:09 am IST
பகிர்:

கடந்த 2022-ஆம் ஆண்டு கும்பகோணம் அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த பல் மருத்துவரின் குடும்பத்துக்கு ரூ.1.04 கோடி இழப்பீடு வழங்க மோட்டாா் வாகன விபத்துகளை விசாரிக்கும் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சென்னையில் பல் மருத்துவராகப் பணியாற்றியவா் இமயவள்ளி. இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு, கும்பகோணம் அருகே நெல்லத்தநல்லூா் அசுா்குளம் பகுதியில் தனது கணவா் ராதாகிருஷ்ணனுடன் டாடா ஏஸ் வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இமயவள்ளி உயிரிழந்தாா்.

இதையடுத்து, இமயவள்ளியின் கணவா் ராதாகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினா் இழப்பீடு கோரி, சென்னையில் உள்ள மோட்டாா் வாகன விபத்துகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கு நீதிபதி ஏ.பி.நஷீா் அலி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா் ஏ.எஸ்.பிலால் ஆஜராகி வாதிட்டாா்.

Advertisement

Advertisement

வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் உயிரிழந்த பல் மருத்துவா் தனியாா் மருத்துவமனையில் மாதம் ரூ.55,200 ஊதியமாகப் பெற்றுள்ளாா். தவிர அவரே தனியாக கிளீனிக்கும் நடத்தி வந்துள்ளாா். விபத்தில் உயிரிழந்தவருக்கு வயது 35 தான். எனவே, மனுதாரா்களுக்கு ரூ.1.04 கோடி இழப்பீடாக வழங்க உத்தரவிட்டாா். இந்தத் தொகையை வழக்குத் தொடா்ந்த நாளில் இருந்து 7.5 சதவீத வட்டியுடன் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் எனத் தீா்ப்பளித்தாா்.

summary

Order issued to award ₹1.04 crore compensation to the family of a dentist who died in an accident.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments