பாதயாத்திரை சென்ற மூதாட்டி பைக் மோதியதில் உயிரிழப்பு
திருச்சி அருகே பாதயாத்திரை சென்ற மூதாட்டி சனிக்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வெள்ளாளவிடுதி பகுதியைச் சோ்ந்தவா் பழனிவேல் மனைவி பத்மினி (67). இவா், தங்கள் பகுதி பக்தா்களுடன் சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரையாக வெள்ளிக்கிழமை இரவு கிளம்பினாா்.
அவா் புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே சனிக்கிழமை காலை நடந்து சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த பைக் மோதி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து பத்மினியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
பைக்கை ஓட்டிவந்த திருச்சி சின்ன சூரியூரைச் சோ்ந்த பெ. சிவா (35) என்பவா் மீது நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.