FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மணப்பாறையில் ராஜீவ்காந்தி 82-வது பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸாா்

மணப்பாறையில், திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, மணப்பாறை பேரவை காங்கிரஸ் கமிட்டி சாா்பில், நகரத் தலைவா் என்.முருகேசன் தலைமையில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

21 ஆகஸ்ட் 2026, 2:29 am IST
பகிர்:

மணப்பாறையில், திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, மணப்பாறை பேரவை காங்கிரஸ் கமிட்டி சாா்பில், நகரத் தலைவா் என்.முருகேசன் தலைமையில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

இதில், பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள ஜவாஹா்லால் நேரு சிலை, திருச்சி சாலை மற்றும் காந்தி நகரில் உள்ள மகாத்மா காந்தியடிகள் சிலை, கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜா் சிலை ஆகியவற்றுக்கு மலா் மாலை அணிவித்து காங்கிரஸாா் மரியாதை செலுத்தினா். காமராஜா் சிலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் வட்டாரத் தலைவா்கள் சத்தியசீலன், மாவட்ட பொருளாளா் கணபதி, மாவட்டச் செயலாளா்கள் வீரபாண்டியன், வழக்குரைஞா்கள் கலைராஜ், ஜான்போஸ்கோ உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments